கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மாரடைப்பால் இறக்கிறார்களா?

#SriLanka #doctor #Heart Attack
Prathees
2 years ago
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மாரடைப்பால் இறக்கிறார்களா?

இன்று மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள்தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களில் அங்கம் வகிக்கும் இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான டாக்டர் ஆனந்த விஜேவிக்ரமஇ இணையச் சனலுக்கு வழங்கிய நேர்காணலில் மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். 

அந்த தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின் சாத்தியம் மிகக் குறைவு என தெரிவித்தார்.

 அந்த தடுப்பூசிகளை பெறாதவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

 இந்நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிரான ஒரு குழுவினர் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை ஏற்பாடு செய்து வருவதாக நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

 இதேவேளைஇ புகைபிடித்தல், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மனஅழுத்தம் ஆகியனவே இதயநோய்களுக்கு பிரதான காரணமாக அமைவதாக களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணரான வைத்தியர் பதியா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 மனஅழுத்தம் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

 உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சிறுவயதிலேயே மாரடைப்புக்கு முகங்கொடுக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் பதியா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4