காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை!

#SriLanka #Death #Hospital #Lanka4
Thamilini
2 years ago
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை!

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 மாத குழந்தையொன்று மூளைக்காய்ச்சல்  காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த குழந்தையின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.  

கடந்த 25ஆம் திகதி காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட தலப்பிட்டி, மைனாகொட பிரதேசத்தை சேர்ந்த 8 மாத குழந்தை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளது.  

குழந்தையின் மரணம் மெனிங்கோகோகல் தொற்று காரணமாக ஏற்பட்டதா என்பதில் சந்தேகம் இருப்பதாக வைத்தியர் விஜேசூரிய தெரிவித்தார். 

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் இருந்து பதிவாகியுள்ள "மெனிங்கோகோகல்" தொற்று வெளி சமூகத்திற்கும் பரவியதா என்ற சந்தேகம் மருத்துவர்கள் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இறந்த குழந்தையின் உடல் உறுப்புகள் அரசு ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

அத்துடன், குறித்த வீட்டை காலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்துள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான நோய் இருப்பின், அது பரவுவதைத் தடுக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை அதிக காய்ச்சல், தலைவலி, கொப்புளங்கள், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4