நாட்டின் பால் உற்பத்தி வீழ்ச்சி!

#SriLanka #லங்கா4
Thamilini
2 years ago
நாட்டின் பால் உற்பத்தி வீழ்ச்சி!

நாட்டில் திரவ பால் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள வடமேல் மாகாணத்தில் தற்போதைய வரட்சி நிலைமை  பால் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடுமையான வெப்பத்தால் கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் வறண்டுள்ளன. அத்துடன்  வரவிருக்கும் வாரங்களில் வறட்சி மோசமடைந்தால் திரவ பால் உற்பத்தி ஐம்பது சதவீதம் வரை குறையும் என்று பால் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.  

சராசரியாக, இந்த நாட்டில் பால் உற்பத்தி 1,250 மில்லியன் லீற்றரைத் தாண்டியுள்ளது, இதில் 18 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வடமேற்கு மாகாணம் கொண்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் வடமேற்கு மாகாணத்தில் திரவ பால் உற்பத்தி 156,000 லீற்றராக பதிவாகியிருந்த போதிலும் எதிர்வரும் வாரங்களில் வறட்சி மோசமடைந்தால் திரவப் பாலின் அளவு சுமார் ஐம்பது வீதம் குறையலாம் என பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

வடமேற்கு மாகாணத்தில் சுமார் முப்பத்தைந்தாயிரம் கால்நடை பண்ணைகள் உள்ளன, அவற்றில் சுமார் இரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் கால்நடைகள் தற்போதைய வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4