சுவிஸ் SKT நாதன் அவர்களால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமரர் ஊர்தி ஒன்று வழங்கிவைப்பு! (புகைப்படம் இணைப்பு)

#SriLanka #Hospital #Lanka4
Thamilini
2 years ago
சுவிஸ் SKT நாதன் அவர்களால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமரர் ஊர்தி ஒன்று வழங்கிவைப்பு! (புகைப்படம் இணைப்பு)

எஸ்.கே.ரி.நாதன் அவர்களினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வண்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 

ஏழை மக்கள் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு பெருந்தொகையான பணம்செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் அவர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இறந்தவரின் உடலை கொண்டு செலவதில் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். 

 மக்களின் இந்நிலை கண்டு வைத்தியசாலை நிர்வாகம்  எஸ்.கே.ரி.நாதன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் இவ் வாகனத்தை  நன்கொடையாக வழங்கியுள்ளார்.

images/content-image/1693138456.jpg

இதேவேளை  சுவிற்சர்லாந்து சூரிச் பகுதியில் வசிக்கும் எஸ்.கே.ரி.நாதன் அவர்கள் எமது தாயக மண்ணில் அரும்பணிகள் ஆற்றிவருகின்றார். அவர் செய்கின்ற சேவைகள் பற்றி யாரிடமும் எடுத்துக் கூறுவதில்லை.   மனதுக்கு பிடித்தமானவற்றை தாய்மண்ணில் இருந்து செயற்படுத்துகின்றார். 

images/content-image/1693138509.jpg

நாம் அறிந்துகொள்ளும் விடயங்கள் தொடர்பாக அவரிடத்தில் கேட்டு அறிந்து அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த முனைகின்ற பொழுதெல்லாம் அவற்றை மிக அன்பான வார்த்தைகள் கூறித் தவிர்த்துவிடுவார்.  

எம்மண்ணில் எமது மக்களுக்கு உள்ளன்புடன் எந்தப்பிரதி உபகாரத்தையும் எதிர்பாராமல் எஸ்.கே.ரி.நாதன் அவர்கள் ஆற்றும் பணி அளவிடற்கரியது. 

images/content-image/1693138567.jpg


 நன்றி

ஊடகவியலாளர் - S.K ராஜன்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4