கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Death #Lanka4
Thamilini
2 years ago
கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி  இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்குமிஸ் தோட்டத்தின் கீழ் பகுதியில் வசித்து வந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த இளைஞன் அதே தோட்டத்தில் வசிக்கும் மேலும் இரு இளைஞர்களுடன் வால்ட்ரிம் தோட்டத்திற்குச் சொந்தமான காப்புக்காட்டில் மரம் வெட்டச் சென்றுள்ளதுடன், பின்னர் அனைவரும் ஒன்றாக நீராடுவதற்காக ஓடையில் இறங்கியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

அங்கு நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போன இளைஞனின் சடலம் பிரதேசவாசிகள் மற்றும் லிந்துலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4