நிலவின் வெப்பநிலையை ஆய்வை தொடங்கியது சந்திரயான் 3
#India
#Moon
#Robot
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Scientist
#Space
Mani
1 year ago
சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடு குறித்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து, நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் என்றும் விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், விக்ரம் லேண்டரில் உள்ள நிலவின் மேற்பரப்பை பரிசோதிக்கும் கருவி அனுப்பிய முதல்நிலை "கிராப்"-ஐ இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் 10 செமீ வரை ஆய்வு செய்யும் திறன் கொண்டது.