சிம்ம ராசியினருக்கு எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்- இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
சிம்ம ராசியினருக்கு எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்- இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : வியாபாரத்தில் சில மாற்றம் நடை பெறும். வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம். பரணி : நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி நிறைவேறும். தந்தை வழி உறவினர்களால் லாபம் அடைவீர்கள். கார்த்திகை 1: அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : பண வரவில் இருந்து வந்த தடை விலகும். அலுவலகப் பணியில் கூடுதல் கவனம் தேவை. ரோகிணி : நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : காலை வரை உங்கள் செயல் இழுபறியாகும். அதன்பின் திட்டமிட்ட வேலை வெற்றியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வரவு இழுபறியாகும். முயற்சிகளில் கவனம் தேவை. திருவாதிரை : அரசு வழியில் சில சங்கடம் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். புனர்பூசம் 1,2,3 : திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும்.

கடகம்

புனர்பூசம் 4 : எதிர்வரும் பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூசம் : பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வரும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். ஆயில்யம் : பெரியோர்கள் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவதால் முயற்சியில் நன்மை உண்டாகும்.

சிம்மம்

மகம் : உடல் நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். எதிர்ப்பு மறையும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். பூரம் : வழக்கு முடிவிற்கு வரும். பகைவர் தொல்லை நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர். உத்திரம் 1 : நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். அஸ்தம் : வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகி வளர்ச்சி கூடும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். சித்திரை 1,2 : நண்பர்கள் துணையுடன் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.

துலாம்

சித்திரை 3,4 : வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். சுவாதி : அரசு வழியிலான முயற்சி தள்ளிப்போகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கோபம் வேண்டாம். விசாகம் 1,2,3 : அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்

விசாகம் 4 : நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். பயணத்தால் நன்மை உண்டு. வழக்கு உங்களுக்கு சாதகமாகும். அனுஷம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவர். கேட்டை : எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தினர் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

தனுசு

மூலம் : வசிக்கும் இடத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற சூழல் உண்டாகும். அவசரப்படுவதை தவிர்க்கவும். பூராடம் : வருமானத்தில் ஏற்பட்ட தடை அகலும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மதிப்பு அதிகரிக்கும். உத்திராடம் 1 : கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உறவினர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். திருவோணம் : உங்கள் அணுகுமுறையால் நன்மை அடைவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1,2 : நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : வீண் செலவு ஏற்படும். நிதானமாகப் பேசி நன்மை அடைய வேண்டிய நாள். எச்சரிக்கை அவசியம். சதயம் : வாகனத்தை சரி செய்வீர். வரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்தது நடக்கும். பூரட்டாதி 1,2,3 : வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை தள்ளிப்போகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். விலகிய உறவினர் மீண்டும் வருவார். உத்திரட்டாதி : அலுவலகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். எண்ணம் நிறைவேறும். ரேவதி : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.