போலி ஆவணங்கள் தயாரித்ததாக இளம் பெண்ணும், இளைஞனும் கைது

#SriLanka #Arrest #Police
Prathees
2 years ago
போலி ஆவணங்கள் தயாரித்ததாக இளம் பெண்ணும், இளைஞனும் கைது

போலி ஆவணங்கள் தயாரித்ததாக இளம் பெண்ணும், இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

  சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்திய பெண் மற்றும் ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் சிக்கியது.

 அதன்படி, நுவரெலியா பொலிஸார் அவர்கள் இருவரையும் போலி ஆவணங்களுடன் கைது செய்தனர். போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் நுவரெலியாவுக்கு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (27) மாலை காருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 அவர்களிடம் 03 மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், 03 வருமான உரிமங்கள், 03 காப்புறுதிச் சான்றிதழ்கள், நிதி நிறுவனம் ஒன்றின் பெயரில் தவணை செலுத்தியதாக 03 கடிதங்கள், வாகனப் பரிமாற்றம் தொடர்பாக ஆட்சேபனை இல்லை என 03 கடிதங்கள், பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் 03 பிரதிகள், 03 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பேராதனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 2000 ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

 பின்னர், இது தொடர்பான முறைப்பாடு பேராதனை பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் சந்தேகநபர் 21 வயதுடைய ஹிகுராக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 

 இவர்கள் இன்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4