ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த மேலும் கால தாமதம்! நீதி அமைச்சர்

#SriLanka #Parliament
Mayoorikka
2 years ago
ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த மேலும் கால தாமதம்! நீதி அமைச்சர்

ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த இன்னும் 02 மாதங்கள் தேவைப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

 ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த இன்னும் 02 மாதங்கள் தேவைப்படும். 

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், சட்டம் தொடர்பான பல விதிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும், இந்தச் செயல்முறை தற்போது நடைபெற்று வருகின்றது.

 இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புதிய சட்டத்தின் அதிகாரங்களுக்கு அமைய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு செயற்படும்.

 ஊழலுக்கு எதிரான சட்டமூலம் ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல், திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4