நீரிழிவை கட்டுப்படுத்துவதில் வெங்காயத்தின் பங்கு
நீரிழிவை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்காததால் ஆரோக்கியமான உணவு முறைகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில் தான் சமீபத்தில், சமையலில் சுவையை அதிகரிக்கும் வெங்காயம் எந்தளவிற்கு நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது, ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோயுடன் இருந்த 3 எலிகளைச் சோதனைக்காக பயன்படுத்தியுள்ளனர். 3 எலிகளுக்கும் வேறுபட்ட அளவுகளுடன் வெங்காய சாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வேகமாகக் குறைவதுடன் கொலஸ்டரால் அளவும் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மேலும் வெங்காயம் இரத்த சர்க்கரை அளவை 50 சதவீதம் குறைக்க உதவும் பண்புகள் உள்ளதோடு, கொலஸ்ட்ராலை நிர்வகிப்பதற்கும் இது உதவுகிறது.
இதோடு வெங்காயத்தின் சாறு, நீரழிவைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் போலவே, செரிமானப் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. செரிமான அமைப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் பண்புகள் வெங்காயச் சாறுக்கு உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் காலை நேரத்தில் வெங்காய சாறு குடிப்பது நல்ல பலன் தரும்.
ஒருவேளை வெங்காய சாறு குடிப்பதற்கு பிடிக்கவில்லை என்றால் வெறும் வெங்காயம் சாப்பிடலாம். நிச்சயம் இது உங்கள் நீரிழிவு பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL
தகவல் மற்றும் ஆலோசனை