சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பத்திற்குள் வன்முறையென்றால் யாது செய்வது ?
குடும்பத்திற்குள்ளோ அல்லது சேர்ந்து வாழ்பவர்களிடையே மோதல் வரும் போது உதவி செய்யப் பல விதமான ஆலோசனை நிலையங்கள் உள்ளன. குடும்பத்திற் குள்ளும் சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையிலும் வன்முறை தடை செய்யப்பட்டுள்ளது.
சேர்ந்து வாழ்பவர்களிடையே மோதல் சேர்ந்து வாழ்பவர்களிடையே மோதல் ஏற்படும் போது அவர்கள் நிபுணத்துவமான உதவியை நாடலாம் (Eheberatung|consultation conjugale).
விசேட ஆலோசனை நிலையங்கள் தீர்வுகளை கண்டுபிடிக்க உதவும். முதலாவது கலந்துரையாடல் இலவசமானது அல்லது மலிவானது. ஓவ்வொரு பிரதேசத்திற்கும் இதற்கெனப் பொறுப்பான ஆலோசனை நிலையங்கள் உண்டு.
குடும்பத்திற்குள் மோதல்
பிள்ளைகளுள்ள குடும்பத்திற்குள் சில சமயம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுமை தரக்கூடிய கடினமான சூழ்நிலைகள் வரலாம்.
பெற்றோரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லையானால் பெற்றோர் உதவியை நாடுவது பரிந்துரைக்கப் படுகிறது. குடும்ப ஆலோசனை நிலையத்தில் (Familienberatungsstelle|service de consultation familiale) தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேட்கலாம்.
பெற்றோர் அவசர அழைப்பிற்கு தொலைபேசியில் அல்லது மின்னஞ்சல் மூலம் நிபுணர்களிடம் பிள்ளை வளர்ப்புப்பற்றியும் கவலைகள் பற்றியும் ஆலோசனைகளைப் பெறலாம். (தொலைபேசி 0848 35 45 55 (நிரந்தர இணைப்புக்கட்டணம்) www.elternnotruf.ch) சிறுவர்களும் இளையவர்களும் தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது அரட்டை மூலம் சிறுவர்கள் அவசர அழைப்பை (Kindernotruf) நாடலாம்.( தொ.பேசி 147 (இலவசம்), www.147.ch).
வீட்டில் வன்முறை
வீட்டில் வன்முறைகள் நடப்பது உத்தியோகபூர்வமான குற்றமாகும். எவர் வன்முறையைச் செய்கிறாரோ அவர் - வன்முறையின் தன்மையைப்பொறுத்து தண்டணைக்குரியவராவார். வன்முறை கணவனுக்கோ மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எதிரானது என்பதில் எவ்வித வித்தியாசமுமில்லை.
ஒரு குடும்பத்தில் வன்முறை நடப்பதாக அறிந்து கொண்டால் நிர்வாகங்கள் செயற்பட உசாராகும். வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு இலவசமான நம்பகமான பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும்.
விசேட வதிவிடம் (Frauenhaus / Väterhaus|Maison d'accueil) இங்கு பெண்களோ அல்லது ஆண்களோ தம் பிள்ளைகளுடன் தற்காலிக பாதுகாப்பைத் தேடலாம். இங்குள்ள மூன்று பெண்கள் நிலையத்திற்கு (பேர்ண் பிராந்தியம், பீல் மற்றும் தூண்) எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். (அவசர எண் AppElle!: 031 533 03 03).
ஆலோசகர்கள் அவசர சூழ்நிலைகளில் இரகசிய மற்றும் இலவச ஆலோசனையுடன் உதவுகிறார்கள். அவர்கள் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் வழங்குகிறார்கள்.
சிறுவர்களும் இளையவர்களும் சிறுவர்கள் அவசரதொடர்பு கொள்ளலாம். (Kindernotruf) (தொ.பேசி 147 (இலவசம்), www.147.ch). எவர் ஒருவர் தன் குடும்ப அங்கத்தவரால் பயமுறுத்தப் படுவதாக உணர்ந்தால் (தொ.பேசி 117) பொலிஸை அழைக்கலாம்.
இதை ஒருவர் வீட்டில் இருந்து நீண்ட காலமாகப் பயமுறுத்தப்பட்டு வன்முறையை எதிர்நோக்கினாலும் செய்யலாம்.