தனி ஒருவன் 2 படத்தின் ப்ரோமோ வெளியீடு

#India #Cinema #Actor #TamilCinema #Director #2023 #Movie
Mani
1 year ago
தனி ஒருவன் 2 படத்தின் ப்ரோமோ வெளியீடு

ஜெயம், M. குமரன் son of மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி வரிசையில் வெற்றி கூட்டணியின் அம்சமாக உருவாக்கப்பட்ட படம் தான் தனி ஒருவன். இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், அவரது தம்பியான ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமும், தனது ட்வீட்டர் பக்கத்தில், "8 Years of magic , forever one of our favourites" என பதிவிட்டிருக்கிறது.

கடமை, கண்ணியம், சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றில் சளைக்காத போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்துள்ள படம் தனி ஒருவன். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு மித்ரன் என்று பெயர் வைத்துள்ளனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, மகிமா என்ற வசீகரமான காதலராக நடிக்கிறார். இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

படம் வெளியானது முதலே, இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால் அதன் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் எழும்பும். அந்த வகையில், அவ்வப்போது, ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகளை கேட்டு வந்தனர். தனி ஒருவன் திரைப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்த நிலையில், இன்று தனி ஒருவன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி ஒருவன் 2இன் அறிவிப்பு ப்ரோமோ இன்று மாலை சென்னை T நகரில் உள்ள AGS சினிமாஸ் அலுவலகத்தில் வெளியாகும், உடன் தனி ஒருவன் படத்தின் சிறப்பு காட்சியாக முழு படம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி ஒருவன் 2இன் அறிவிப்பு ப்ரோமோவை இயக்குனர் AL விஜய் படப்பிடித்திருக்கிறார். மேலும், இந்த ப்ரோமோ ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!