நீரிழிவு நோய்க்கு அதிக தாகம் ஏற்பட்டால் அதற்கான ஆயுள்வேத சிகிச்சை
நீரிழிவு வியாதிக்கும், டயாபடீஸ் மெலிடஸ்க்கும் உள்ள ஒரே ஒற்றுமை – அதிக அளவு சிறுநீர் கழித்தல், மற்றபடி இவை இரண்டும் வேறு வேறு.
பிட்யூட்டரி சுரப்பி சரியான அளவு ஹார்மோன் சுரக்காததால் அடங்கா தாகம் ஏற்படும். 4 லிட்டரிலிருந்து 40 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. சிறுநீர் அபரிமிதமாக, அதுவும் இரவுகளில் போகும். இதே நிலை தான் நீரிழிவு வியாதியிலும் இதில் இன்சுலின் இல்லாததால் சிறுநீர் அதிகம் வெளியேறி அடங்காதாகம் ஏற்படும்.
ஆயுர்வேதத்தின் படி, அதிகப்படி உடல் உழைப்பு, பலவீனம், நரம்புத்தளர்ச்சி இவற்றால் வாதமும், கோபதாபம், கெடுதலான உணவுகள் பட்டினி இவற்றால் பித்தமும் உண்டாகி, தாகவிடாயை தூண்டும்.
ஆயுர்வேத சிகிச்சைகள்
#காய்ச்சப்படாத புதுப்பால், 2 கிளாஸ் குடிக்கலாம்.
#கொத்தமல்லி விதைகள், நெல்லிக்கனிகள், சுக்கு, உலர்ந்த திராட்சை இவற்றால் செய்த கஷாயத்தை குடித்தால் தாகம் அடங்கும்.
#மாவிலை, நாகப்பழ மர இலைகள், அத்தி இலைகள் இவற்றின் சாறுகள் 5 – 10 மி.லிட்டர் அளவில் 3 வேளை குடிக்கலாம். மஞ்சள் சேர்ந்த கஷாயம் குடிக்கலாம்.
#பழுத்த புளிச்சாறு தாகத்தை தணிக்கும்.
சந்தனப்பொடி சேர்த்த இளநீர் அடங்காதாகத்திற்கு நல்லது.
ஜம்பீராதி பானகம், நெல்லி ரசாயனம், குடூச்சி, சத்வா, போன்ற மருந்துகள் குணம் தரும். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL
தகவல் மற்றும் ஆலோசனை