காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மீண்டும் மறுப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது.
நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி, கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வழக்கம் போல், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க, கர்நாடக அரசு மறுத்து வருகிறது. அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தற்போது தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என கர்நாடக அரசு கூறியுள்ளது தமிழக அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.