கடக ராசியினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கடக ராசியினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த விவகாரம் முடிவு பெறும். பரணி : உங்கள் யோசனையால் உயர்ந்த ஒருவர் தேடி வருவார். எதிர்பாராத வருமானம் வரும். கார்த்திகை 1 : குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். நீண்டநாள் எண்ணம் ஒன்று இன்று பலிக்கும். ரோகிணி : வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : உயர் நிலையில் இருப்பவரின் உதவியுடன் உங்கள் முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர். செயல்களில் இருந்த தடை விலகும். திருவாதிரை : வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: காலை வரை உங்கள் முயற்சி இழுபறியாகும். அதன்பின் நெருக்கடி விலகும். நிதிநிலை உயரும்.

கடகம்

புனர்பூசம் 4 : காலையில் உங்கள் செயல் லாபமாகும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும். பூசம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் இன்று குழப்பம் ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. ஆயில்யம் : எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினை முடியும். 

சிம்மம்

மகம் : உங்கள் வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்பளிப்பர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூரம் : தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியாகும். உத்திரம் 1 : குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : உறவினருக்கு ஏற்பட்ட பிரச்னையை முன் நின்று தீர்த்து வைப்பீர். ஆரோக்கியம் சீராகும். அஸ்தம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். செயல்களில் உண்டான தடை விலகும். எதிர்ப்பு அகலும். சித்திரை 1,2 : எதிர்ப்பு விலகும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். பொதுநலனில் அக்கறை கொள்வீர். 

துலாம்

சித்திரை 3,4: பொறுப்பு அதிகரிக்கும். மேலை நாட்டு தொடர்பு ஒன்றால் நன்மை ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். சுவாதி: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்து விவகாரங்களில் சாதகமான நிலை எற்படும். விசாகம் 1,2,3: பயணத்தால் ஆதாயம் காண்பீர். மாற்று இனத்தவரால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4 : அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வருமானம் வரும். நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். அனுஷம் : தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருவாய் வரும். கேட்டை : உறவினர் உங்கள் உதவியை விரும்புவர். அரசு வழியிலான செயல்களில் ஆதாய நிலை உண்டாகும். 

தனுசு

மூலம் : நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பூராடம் : உறவினர் வழியே நலம் காண்பீர். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1 : வேலை தேடியவர்களுக்கு உண்டான தகவல் வரும். இன்று மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர். வருமானம் அதிகரிக்கும். திருவோணம் : உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர் பண வருவாய் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : நண்பர்கள் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர். பிரச்னை விலகும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : சங்கடங்களை மறந்து செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர். சதயம் : நேற்று வரை இருந்த சங்கடம் நீங்கும். கடந்த கால அனுபவத்தால் வளர்ச்சிக்கு வழி காண்பீர். பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4 : நீங்கள் எதிர்பாராத செலவு உண்டாகும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி : தேவையில்லாத பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். வரவை விட செலவு அதிகரிக்கும். ரேவதி: உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.