ஜி 20 மாநாட்டையொட்டி டெல்லியில் செப்டம்பர் 12-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
#India
#Delhi
#Drone
#2023
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago
ஜி-20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அதன் உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள் வருகை தர உள்ளனர்.
இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாடு நடப்பதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், டிரோன் கேமிராக்கள், ரிமோட் ஏர் கிராப்ட், சிறிய வகை விமானங்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதித்து டெல்லி கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு வரும் செப்டம்பர் 12-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.