மெனிங்கோகோகல் நோய் கொழும்புக்குள் நுழைகிறதா?

#SriLanka #Colombo
Prathees
2 years ago
மெனிங்கோகோகல் நோய் கொழும்புக்குள் நுழைகிறதா?

முதன் முதலில் காலி சிறைச்சாலையில் கண்டறியப்பட்ட மெனிங்கோகோகல் நோயை ஒத்த அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளார்.

 கண்டுபிடிக்கப்பட்ட 49 வயதுடைய நபர் ரத்மலானையில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணிபுரிபவர் மற்றும் ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர்.

 நோயாளி காய்ச்சலுடன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மெனிங்கோகோகல் நோயைப் போன்ற அறிகுறிகள் தோன்றியதை அடுத்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எவ்வாறாயினும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜெயன் மெண்டிஸ், மெனிங்கோகோகல் நோயின் அறிகுறிகளுடன் எந்தவொரு நோயாளியும் தமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4