இளையராஜாவிற்கு இசை ஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?வெளியான தகவல்

#Cinema #TamilCinema #Lanka4 #music competion
Kanimoli
1 year ago
இளையராஜாவிற்கு இசை ஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?வெளியான தகவல்

தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர் இளையராஜா. இவருடைய பாடலைக் கேட்கும் போது தம்மையே மறக்கடிக்கும் அளவுக்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். இவரை திரையுலகில் இசை ஞானி என்று அழைப்பார்கள். ஆனால் இந்த பட்டத்தை யார் இவருக்கு தந்தது என்ற தகவல் தெரியவந்துள்ளது. 

கோலிவுட்டில் ஜாம்பவான்கள் ஆக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் என்று எல்லோருக்கும் தரமான ஹிட் பாடல்களை கொடுத்தவர். மேலும் இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. இதன் காரணமாகத்தான் தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியால் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ‘இசை ஞானி’ என்ற பட்டம் சூட்டப்பட்டது. காரைக்குடியில் நடைபெற்ற ஒரு விழாவில், இந்த பட்டத்தை அவர் கொடுத்தார். 

இவர் பெரும்பாலும் மேஸ்ட்ரோ என்றும் குறிப்பிடப்படுகிறார். இது லண்டனில் இளையராஜாவிற்கு வழங்கப்பட்ட மதிப்பு மிக்க பட்டமாகும். இன்றும் இவர் பாடல்களுக்கு அடிமையாகியவர்கள் கோடான கோடி பேர். புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் என்றுமே அழியாத ஞானி தான் இளையராஜா. இளையராஜா பாட்டுக்கள் எல்லாம் பழசாகிவிட்டது. அவருக்கு இப்போதுள்ள 2K கிட்ஸ்க்கு பிடித்தவாறு பாட்டு போட முடியாது என்று கூறியுள்ளனர். 

ஆனால் அதை எல்லாம் உடைத்து இப்போது மட்டுமில்லை எப்போதும் என் ட்ரெண்ட் தான் என்று காட்டியவர் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை படத்திற்கு இசைஞானி தான் இசையமைத்து ஹிட் கொடுத்தார். இதில் இடம்பெற்ற ‘காட்டுமல்லி’ பாடல் இளசுகளை முணுமுணுக்க வைத்தது. தற்போது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு ஏற்றார் போல் பாடல்களை இசையமைக்க முடியும் என்பதையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!