தனுசு ராசிக்காரர்களுக்கு சகோதரர்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்கள் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
தனுசு ராசிக்காரர்களுக்கு சகோதரர்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும் பரணி : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். கார்த்திகை 1: உங்கள் செயல் வெற்றியாகும். பொருளாதார நிலை நண்பர்கள் உதவியால் சீராகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். ஆதாயம் அதிகரிக்கும். ரோகிணி : அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்து வந்த செயல் முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2 : உங்களை விட்டு விலகிச் சென்றவர் மீண்டும் வருவர். கூட்டுத்தொழில் பற்றி சிந்திப்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர். பிறரின் உதவி உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். திருவாதிரை : பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். புனர்பூசம் 1,2,3 : வியாபாரத்தில் புதிய தொடர்பு உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

கடகம்

புனர்பூசம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும். பூசம் : உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் கவனம் அவசியம். ஆயில்யம் : மறைமுக எதிர்ப்பு அதிகரிக்கும். அதை சமாளிப்பீர்கள். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

மகம் : உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். தொழிலில் இருந்து வந்த நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூரம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். உத்திரம் 1 : வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சி இன்று பலிக்கும். எதிரி விலகுவர். அஸ்தம் : விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் உண்டான சங்கடம் விலகும். சித்திரை 1,2 : மறைமுக எதிர்ப்புகளை கண்டு பிடித்து முறியடிப்பீர். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.

துலாம்

சித்திரை 3,4 : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி : செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர். பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3 : குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். முயற்சியில் வெற்றி பெறுவீர்.

விருச்சிகம்

விசாகம் 4 : அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உழைப்பிற்கேற்ற ஆதாயம் காண்பீர். நிதிநிலை உயரும். அனுஷம் : வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். உங்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை. கேட்டை : வேலைத்தேடி வந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.

தனுசு

மூலம் : குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். நிதிநிலை சீராகும். பூராடம் : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பர். லாபமான நாள்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகள் புரிந்து செயல்படுவர். திருவோணம் : தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2 : நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : செயல்களில் குழப்பம் உண்டாகும். முயற்சி இழுபறியாகும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. சதயம் : வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி மேற்கொள்வீர். பூரட்டாதி 1,2,3 : மனதில் இருந்த குழப்பம் நீங்கும். விழிப்புடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.

மீனம்

பூரட்டாதி 4 : செலவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். உத்திரட்டாதி : உங்கள் செயல் இன்று இழுபறியாகும். நெருக்கடி நீடிக்கும். செலவிற்கேற்ற வருமானம் வரும். ரேவதி : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.