இரட்டை குழந்தைகளுடன் வீடியோ வெளியிட்ட நயன்தாரா!

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #Tamilnews #Movie
Mani
2 years ago
இரட்டை குழந்தைகளுடன் வீடியோ வெளியிட்ட நயன்தாரா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. உயிர் ருத்ரோநீல் - உலக் தெய்வக் என பெயரிட்டனர். இருவரும் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இது ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகும். இதன் மூலம் தொடர்ந்து ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில், தங்கள் குழந்தைகள் உயிர், உலகத்துடன் தங்களது முதல் ஓணத்தைக் கொண்டாடினர். அது தொடர்பான புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கியுள்ளார்.

தன்னுடைய முதல் பதிவாக, தனது இரட்டை குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஒரு அறையில் இருந்து வெளியே வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4