'SK21' படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
#India
#Actor
#Director
#2023
#Tamilnews
#Movies
#Movie
Mani
1 year ago

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 75 நாட்களாக அதாவது காஷ்மீரில் நடைபெற்று வரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.



