கடக ராசியினர் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கடக ராசியினர் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் அடைவீர். அதன் பின் செயல்களில் தடையும் தாமதமும உண்டாகும். பரணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் காலையிலேயே வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். கார்த்திகை 1 : உங்கள் செயல் நண்பர்கள் உதவியால் வெற்றி பெறும். புதிய முயற்சி ஒன்று பலிதமாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். ஆதாயம் அதிகரிக்கும். ரோகிணி : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சி பலிதமாகும். மிருகசீரிடம் 1, 2 : உங்களை விட்டு விலகியவர் மீண்டும் உதவி கேட்டு வருவர். தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : பெரியோர் ஆதரவுடன் திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர். செல்வாக்கு அதிகரிக்கும். திருவாதிரை : பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்து வந்த தடை நீங்கும். லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3 : வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருவர். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும். பூசம் : செயல்களில் இருந்த தடை விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம் : மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

சிம்மம்

மகம் : மதியம் வரை உங்கள் எண்ணம் பூர்த்தி பெறும். அதன்பின் செயல்களில் சங்கடம் உண்டாகும். பூரம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். உத்திரம் 1 : வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபத்தால் பண நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : உடல் நிலையில் உண்டான பாதிப்பு நீங்கும். நண்பர்கள் உதவியால் ஒரு செயலில் லாபம் உண்டாகும். அஸ்தம் : வியாபாரத்தில் உண்டான சங்கடம் விலகும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். உங்கள் கனவு நிறைவேறும் நாள்.

துலாம்

சித்திரை 3,4 : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்ப பிரச்னை தீரும். எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி : செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர். குல தெய்வக்கோயிலுக்கு சென்று வருவீர். விசாகம் 1,2,3 : சொத்துப் பிரச்னை ஒன்றில் பேசி தீர்வு காண்பீர். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். அனுஷம் : குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கேட்டை : தேவையற்ற சங்கடம் உங்களைத் தேடி வரும். வேலையில் வீண் விவாதம் வேண்டாம்.

தனுசு

மூலம் : உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சங்கடம் நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். பூராடம் : உங்கள் எண்ணம் பொழுது போக்கில் செல்லும். நண்பர்களுடன் இணைந்து பயணிப்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் 1 : எதிர்பார்த்த உதவி வரும். வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். விலகிய உறவினர் வருவர்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: வருவாயில் இருந்து வந்த தடை அகலும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2 : பணத்தேவை நிறைவேறும், குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம் : எதிர்பார்ப்பு ஒன்று தள்ளிப்போகும் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் திடீர் வரவால் தேவை பூர்த்தியாகும். பூரட்டாதி 1,2,3 : காலையில் இருந்த நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும். எதிர்பாராத வரவால் சங்கடம் நீங்கும்.

மீனம்

பூரட்டாதி 4 : அலைச்சல் அதிகரிக்கும், புதிய முயற்சி இழுபறியாகும் என்றாலும் மதியத்திற்கு மேல் நிலை மாறும், உத்திரட்டாதி : மதியம் வரை நெருக்கடி நீடிக்கும். அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ரேவதி : உங்கள் மனம் மகிழும் படியான நிலை மதியத்திற்கு மேல் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும்.