குருந்துார் மலைக்குக் கிடைத்த வெற்றி, நீதி ஒற்றுமைக்குக் கிடைத்தது

#SriLanka #Court Order #Mullaitivu #Lanka4 #இலங்கை #லங்கா4
குருந்துார் மலைக்குக் கிடைத்த வெற்றி, நீதி ஒற்றுமைக்குக் கிடைத்தது

குர்ந்துார் மலைக்கு கிடைக்கப்பெற்ற வெற்றி நீதி மற்றும் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியேயென முன்னாள் வட மாகாண சபை விவசாயை அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.

 தண்ணிமுறிப்பு குருந்துார் மலை பகுதியிலே அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்குப்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி்க்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது காரணம் இது நீண்டகால பிரச்சினை அத்துடன் சமாதானத்தை மீறி நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டிருந்தது.

 அந்தவகையில் இ்ந்த தீர்ப்பானது ஒரு ஆரம்பப்படியே ஆகும். மற்றையது அமுலாக்கல் பிரிவுகள் சார்பாக நடந்து கொள்கிறது என்பது இந்தத் தீர்ப்பில் புலப்பட்டது. அத்துடன் இத்தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாக உலக நாடுகளும், உலக மக்களும் ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கிற்காக உழைத்தவர்கள் இப்பிரதேச மக்கள், மற்றும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்டமை இந்த வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது என்று நான் கருதுகிறேன். மக்களின் ஒன்றிணைந் நீதிக்குரல் காரணமாகவும் நீதி ஒற்றுமைக்காகவும் கிடைத்துள்ளது இந்த வெற்றி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4