எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்துள்ள சினோபெக் நிறுவனம்

#SriLanka #prices #people #Fuel
Prasu
2 years ago
எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்துள்ள சினோபெக் நிறுவனம்

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை இன்று (01) முதல் உயர்த்தியுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 358.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 414.00 ஆக அதிகரித்துள்ளது.

லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 338.00 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கை தலைமையகமாக கொண்ட சினோபெக் நிறுவனம் “சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட்” என்ற பெயரில் தமது முதலாவது நிறுவனத்தை அண்மையில் ஹோமாகம மத்தேகொடயில் தனது முதலாவது எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இதன் புதிய விலை 375 ரூபாவாகும். லங்கா ஒயிட் டீசல் விலை இரண்டு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 306 ரூபாவாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன் புதிய விலை 258 ரூபா என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய 226 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4