மன்னாரில் இனம்தெரியாதோர் அரச காணியை சுவீகரிக்க முயற்சி

#SriLanka #Mannar #Police #Lanka4 #land
மன்னாரில் இனம்தெரியாதோர் அரச காணியை சுவீகரிக்க முயற்சி

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமான முறையில் சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

 இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தி காணியை துப்புரவுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்றதையடுத்து, குறித்த நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை கைவிட்டுத் தப்பிச்சென்றனர்.

 இனந்தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தி காடுகளை அழித்து காணியைத் துப்புரவு செய்வதாக இலுப்பைக்கடவை பொலிஸார் மற்றும் இராணுவத்தின் 541வது படைப்பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்றனர்.

 இந்நிலையில் அவர்களைக் கண்ட குறித்த நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் காணியைத் துப்பரவுசெய்ய பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களை பொலிஸார் மீட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4