கனடாவிற்கான பயண மோசடி செய்த யாழ் நபர் கைது

#Jaffna #Arrest #Canada #Travel #Lanka4
கனடாவிற்கான பயண மோசடி செய்த யாழ் நபர் கைது

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து 6 பேரின் பணம் பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த சந்தேகநபரிடம் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிக்குளம், மல்லாவி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே ஏமாற்றப்பட்டுள்ளனர்.

 ஒவ்வொருவரிடமும் இருந்து தலா 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவைப் பெற்றதுடன் ஒருவரிடம் இருந்து 3 பவுண் சங்கிலி ஒன்றையும் சந்தேக நபர் பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பணத்தைப் பெற்றுக்கொண்டவர் இழுத்தடித்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

 கைதான சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4