விருச்சிக ராசியினருக்கு வழக்கு விவகாரம் சாதகமாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
விருச்சிக ராசியினருக்கு வழக்கு விவகாரம் சாதகமாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : வரவை விட செலவு அதிகரிக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். பரணி : திடீர் செலவுகளை சந்திப்பீர். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். கார்த்திகை 1 : பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ரோகிணி : நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். சேமிப்பு உயரும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினரின் முயற்சியால் இடம் வாங்கும் எண்ணம் பலிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயமாகும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். திருவாதிரை : உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு வழியில் நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். புனர்பூசம் 1,2,3 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி வெற்றியாகும். பண வரவு மகிழ்ச்சி தரும்.

கடகம்

புனர்பூசம் 4 : குடும்பத்தினர் விருப்பத்தை அறிந்து அதைப் பூர்த்தி செய்வீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூசம் : தடைபட்ட வேலை மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆயில்யம் : வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். மற்றவரின் மறைமுக சதிகளை முறியடிப்பீர்.

சிம்மம்

மகம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பூரம் : உங்கள் முயற்சி தாமதமாகும். செயல்களில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அலைச்சல் உண்டாகும் உத்திரம் 1 : பிறரின் செயல் உங்களை சங்கடப் படுத்தும். முயற்சியில் விழிப்புணர்வு அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4 : உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்ப்பு கூடும். அஸ்தம் : வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயல் நிறைவேறும். சித்திரை 1,2 : உங்கள் திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று முடியும்.

துலாம்

சித்திரை 3,4 : போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்ப்புகளை முறியடித்து உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். சுவாதி : சிந்தித்து செயல்படுவீர். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெகுமுன்னேற்றம் அடைவீர். விசாகம் 1,2,3: பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு உண்டாகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : மற்றவரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும். உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. அனுஷம் : தொழிலை விரிவு படுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை : தொழிலிலுள்ள தடை விலகும். திட்டமிட்டு செயல்பட தொடங்குவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

தனுசு

மூலம் : உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள உழைப்பீர்கள். அதற்கேற்ற லாபத்தையும் அடைவீர்கள். பூராடம் : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். உத்திராடம் 1 : திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி செய்து முடித்து லாபம் காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : துணிச்சலுடன் செயல்பட்டு நீண்டநாள் முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர். எதிரிகள் விலகுவர். திருவோணம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு வரும். மற்றவர்கள் பாராட்டுவார்கள். அவிட்டம் 1,2 : புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். யோசித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4 : நெருக்கடி நீங்கும். தடைபட்டிருந்த முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம் : சுறு சுறுப்புடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.

மீனம்

பூரட்டாதி 4 : மனதில் தேவையற்ற குழப்பம் வரும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். விழிப்புணர்வு தேவையான நாள். உத்திரட்டாதி : எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். செலவுகள் கட்டுக்குள் வரும். ரேவதி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.