கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்யமுடியும்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்யமுடியும்!

ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று (02.09) முதல் 1250 ரூபாவிற்கு விற்பனை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர்  மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

அத்துடன் கோழி மற்றும் முட்டை உற்பத்திக்காக செலவிடப்பட்ட நிதியை மீளாய்வு செய்யுமாறும் அவர்  சுகாதார மற்றும் கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இதேவேளை  கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் தொழில் அதிபர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும்  திங்கட்கிழமை (04.09)  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கலந்துரையாடலின் பின்னர் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும்  வர்த்தக அமைச்சர்  நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.  

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் எனவும், இருப்பினும் தொழில்துறையினர் அந்தச் சலுகைகளை மக்களுக்கு வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4