ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கியமாக இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக அதன் அபிவிருத்திப் பணிப்பாளர்  உபுல் ரணவீர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  "கடந்த 5 வருடங்களைக் கருத்தில் கொண்டு, 2023ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பயிர்களின் ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் ஈட்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, ஜூன் 2023 வரை 34,771 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, . 86,680 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போன்ற பயிர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், மேலும் பேரீச்சம்பழம் ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணி பெறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4