சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

#Arrest #Women #Anuradapura #tablets
Prasu
2 years ago
சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை அனுராதபுரம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த பெண் அனுராதபுரம்-யாழ்ப்பாண சந்தி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடிப்படையினர் பெண்ணிடம் 7 கருத்தடை மாத்திரைகளை 35 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்பவரை போன்று ஒருவரை அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் பெண்ணை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண் அனுராதபுரத்தில் சேவையாற்றும் பிரபலமான மருத்துவர் ஒருவரிடம் பணிப்புரிந்து வருபவர் என தெரியவந்துள்ளது.

 கைது செய்யப்பட்ட பெண் நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் பெண்ணை எச்சரித்து, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4