சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து கட்டமைப்பு எவ்வாறிருக்கும்
சுவிஸில் பகிரங்கப் போக்குவரத்து மிகவும் நன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களையும் புகையிரதத்திலோ அன்றி பஸ்சிலோ அடையலாம். போக்குவரத்து சரியான நேரத்திற்கும் ஒழுங்கான நேர இடைவெளியிலும் இருக்கும்.
பகிரங்கப் போக்குவரத்து
சுவிஸின் பகிரங்கப் போக்குவரத்து (ÖV) ஒரு உயர்ந்த நிலை வகிக்கிறது. ஓவ்வொரு இடங்களையும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் பல தடவை அடையக்கூடியதாக இருப்பதால் அதிகமானோர் புகையிரதம் அல்லது பஸ்ஸைப் பாவிக்கிறார்கள்.
இதில் பிரயாணம் செய்வது ஓரளவு அதிக செலவாயிருந்தாலும் காசு மிச்சம் பிடிக்கக் கூடியமாதிரி பல வழிகளும் உண்டு. ஒரு சந்தா அல்லது தள்ளுபடி அட்டை வாங்குவதும் பிரயோசனப்படும்.
மிகவும் மலிவான அரை விலைச்சந்தாவுடன் உதாரணத்திற்கு சுவிஸ் முழுவதும் அரைவாசி விலையில் பிரயாணம் செய்யலாம்.
குறிப்பிட்ட புகையிரதம் அல்லது பேருந்துகளுக்கு சேமிப்பு சீட்டும் வாங்கவும் முடியும்.
பிரயாணச் சீட்டும் சந்தாவும்
எவர் புகையிரதத்தில் பயணப்பட விரும்புகிறாரோ அவர் பயணத்தின் முன்பு ஒரு பிரயாணச்சீட்டு (Billett) வாங்கவேண்டும்.
புகையிரதத்துள் பிரயாணச்சீட்டு வாங்க முடியாது. இவை பேரூந்துகளில் வேறு விதமாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஓவ்வொரு புகையிரத நிலையத்திலும் அதிகமான பஸ் நிலையங்களிலும் பிரயாணச்சீட்டு இயந்திரங்களும் பெரிய புகையிரத நிலையங்களில் கருமபீடங்களும் காணப்படும்.
பிரயாணச்சீட்டுக்களை கணணியிலும் கைத்தொலைபேசியிலும் வாங்கலாம். அதிகமான பிரயாணங்கள் செய்பவர்களுக்கு பலதரப்பட்ட சந்தாக்கள் உள்ளன.
இவை ஒரு குறிப்பிட்ட தடத்துக்கு, குறிப்பிட்ட பிரதேசத்திற்கு அல்லது சுவிஸ் முழுவதற்கும் (Generalabonnement | abonnement général) கிடைக்கும்.
6 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் ஒரு துணைநபருடன் இணைந்து இலவசமாகப் பயணிக்கலாம். பிள்ளைகள் 16 வயது வரை பெற்றோருடன் அல்லது பேரன் பேத்தியுடன் ஓரளவு இலவசமாகப் பயணம் செய்ய இளையவர் - அல்லது பேரர் அட்டை (Junior- oder Enkelkarte) வைத்திருக்க வேண்டும்.
பிரயாணச்சீட்டுக்கள் சந்தாக்கள் பற்றிய தகவல்களை சுவிஸ் அரச புகையிரதம் (SBB) அல்லது பஸ் போக்குவரத்து சபையில் பெறலாம் .
பேர்ண் மாநிலம் - LIBERO-விலை நிர்ணயசபை
பேர்ண் மாநிலத்தின் பணிப்பின் பெயரில் விலை நிர்ணயசபை LIBERO மூலம் விசேட விலையில் பிரயாணச் சீட்டுக்கள், இபிரயாணச் சந்தாக்கள்இ 1 நாள் பயணச் சீட்டுகளைப் பெறலாம்.
இந்தப் பகுதிக்குள் பல வலயங்கள் அடக்கப்பட்டுள்ளன. இந்தப்பிரயாணச்சீட்டு வாங்கப்பட்ட வலயத்திற்குள் புகையிரதத்திலும் பஸ்ஸிலும் பாவிக்கலாம். குறிப்பிட்ட வலயத்திற்கு வெளியில் பிரயாணம் செய்வதற்கு மேலதிகமாக பிரயாணச் சீட்டு வாங்க வேண்டும்.
கிராமசபைகளின் 1 நாள் பயணச்சீட்டு
எவர் ஒரு நீண்ட பிரயாணத்தைச் சுவிஸ்க்குள் திட்டமிடுகிறாரோ அவர் அதிகமான கிராமசபைகளிலுள்ள 1 நாள் பயணச்சீட்டை (Gemeindetageskarte) மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
எனினும் இந்த வசதி மட்டுப்படுத்தப்பட்டபடியால் பயணச்சீட்டை முற்கூட்டியே பதிவுசெய்யவேண்டும். இது பற்றிய தகவல்களைக் கிராமசபை நிர்வாகத்தில் பெறலாம்.
இரவு வலையமைப்பு
பேர்ண் மாநிலத்தில் வார இறுதி நாட்களிலும் பின் இரவு நேரத்திலும் புகையிரதமும் பஸ் சேவையும் உண்டு. கவனம்: இரவுப் பிரயாணத்தின் போது பிரயாணச் சீட்டுடன் விசேட மேலதிக கட்டணமும் அறவிடப்படும்.