மீன ராசியினருக்கு மனக் குழப்பம் நீங்கும் , வருமானம் அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
மீன ராசியினருக்கு மனக் குழப்பம் நீங்கும் , வருமானம் அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி : இன்று மாலை வரை சில சங்கடம் நீடிக்கும். செலவு அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும். பரணி : புதிய முயற்சி இன்று வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள். கார்த்திகை 1 : குடும்ப வழியில் செலவுகள் அதிகரிக்கும். பண நெருக்கடியால் சங்கடம் உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த ஒரு வேலை நிறைவேறும். ரோகிணி : வியாபாரத்தை நண்பர்களால் உதவியால் விரிவு செய்வீர். தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். மிருகசீரிடம் 1,2: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சி லாபமாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரம் லாபமாகும். வரவுகள் அதிகரிக்கும். திருவாதிரை : தொழிலில் இருந்து வந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரவால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்.

கடகம்

புனர்பூசம் 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பெரியோர் ஆதரவுடன் பேசி தீர்வு காண்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூசம் : வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொண்ட முயற்சி லாபத்தை உண்டாக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். ஆயில்யம் : குடும்பத்தில் இருந்து வந்த சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.

சிம்மம்

மகம் : வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். உங்கள் செயல் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த பணம் வரும். பூரம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரம் 1 : வரவு செலவில் சங்கடம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4 : மாலை வரை உங்கள் முயற்சி வெற்றியாகும். அதன்பின் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். அஸ்தம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். புதிய நட்பினால் உங்கள் எண்ணம் ஒன்று ஈடேறும். சித்திரை 1,2: முயற்சி நிறைவேறும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவீர். நட்பு வட்டம் விரியும்.

துலாம்

சித்திரை 3,4 : தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். சுவாதி : எதிர்பார்த்த வரவு வரும். எதிர்ப்பு விலகும். உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறும். ஆதாயமான நாள். விசாகம் 1,2,3: செயலில் இருந்த தடை விலகும். தொல்லை அளித்தவர்கள் விலகிச் செல்வார். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

விசாகம் 4 : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம் : பெரியோர் ஆதரவுடன் இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டை : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் நிறைவேறும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள்.

தனுசு

மூலம் : உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூராடம் : நண்பர் ஆதரவால் உங்கள் எண்ணம் ஒன்று ஈடேறும். வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். உத்திராடம் 1 : திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உறவினர் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திருவோணம் : மறைமுக எதிர்ப்பை முறியடிப்பீர்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : வரவேண்டிய பழைய பாக்கி வரும். கோயிலுக்கு செல்லுதல் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : வியாபாரிகளின் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சதயம் : உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: குடும்ப நலன் கருதி மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். வரவு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

மீனம்

பூரட்டாதி 4 : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். துணிச்சலாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர். உத்திரட்டாதி : மனக் குழப்பம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ரேவதி: அடுத்தவருக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!