நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்!

#SriLanka #weather #Lanka4 #HeavyRain
Thamilini
2 years ago
நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (03.09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

அதேபோல் மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகள்,  வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இடி மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4