உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தகவல் அமைப்பின் பிரச்சனைகளை தீர்க்க ஏழு கோடி ரூபாய்

#SriLanka #government
Prathees
2 years ago
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தகவல் அமைப்பின் பிரச்சனைகளை தீர்க்க ஏழு கோடி ரூபாய்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை நடைமுறைப்படுத்துவதில் எழும் சிக்கல்களுக்காகச் செய்யப்பட்ட சில மாற்றங்களுக்கு ஏழு கோடியே பதினேழு லட்சத்து இருபத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்து இரண்டு ரூபாய் (71,723,662) சிங்கப்பூர் நிறுவனத்திற்கு அவ்வப்போது செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

 இந்த தகவல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த சிங்கப்பூர் நிறுவனம் ஒரு மனித நாளுக்கு தோராயமாக 185இ017 ரூபாய் செலவழிக்கும் என்றும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

 இந்த தகவல் அமைப்பை உருவாக்கும் போது கணினி தேவைகள் பகுப்பாய்வில் கவனம் செலுத்தாததால் இந்த நிறுவனத்திற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த தகவல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன். இதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் 04 பில்லியன் ரூபாவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4