மீனவர்களுக்கான காலநிலை எச்சரிக்கை. கடல் செல்லும் முன்னர் வாசியுங்கள்.

#SriLanka #weather #Lanka4
Kanimoli
2 years ago
மீனவர்களுக்கான காலநிலை எச்சரிக்கை. கடல் செல்லும் முன்னர் வாசியுங்கள்.

கடற்தொழிலாளர்கள் நன்மை கருதி lanka4 ஊடகம் வெளியிடும் செய்தி இது. ஆம்… கடலுக்குப் போகும் முன்னர் இதை வாசியுங்கள் தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்கள் நீரால் மூழ்கியுள்ளன.

 இதேவேளை, தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக கடல் பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்திரயங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். குறித்த பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4