15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் பெற்றோருடன் கைது

#SriLanka #Arrest #Sexual Abuse #Love
Prathees
2 years ago
15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் பெற்றோருடன் கைது

சிறுமியை (15வயது) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் (19வயது) கொக்கவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இளைஞனுக்கு ஆதரவாக இருந்த இளைஞனின் பெற்றோர்களும் கொக்கவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் இந்த 15 வயது சிறுமி துடுவெவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞனுடன் கைபேசி மூலம் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

 இந்த சிறுமி வீட்டாருக்கு தெரிவிக்காமல் இரகசியமாக பஸ்சில் ஏறி துடுவெவ கிராமத்தில் வசிக்கும் தனது அன்புக்குரிய இளைஞனை தேடி வந்துள்ளார்.

 பின்னர் இருவரும் அந்த இளைஞனின் வீட்டில் இரவைக் கழித்துள்ளதுடன்இ இது குறித்து இளைஞனின் தந்தை கொக்கவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 பின்னர்இ சிறுமியையும், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பத்தொன்பது வயது இளைஞனையும்இ இரவைக் கழிக்க உதவிய இளைஞனின் பெற்றோர் இருவரையும் கொக்கவெவ பொலிஸார் கைது செய்தனர்.

 அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4