ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் ராஜபக்சாக்களின் நெருங்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு

#SriLanka #Death #Easter Sunday Attack #Lanka4
Kanimoli
2 years ago
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன்  ராஜபக்சாக்களின் நெருங்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு கொடூரமாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் செனல் - 4 இல் நாளை (05) ஒளிபரப்பப்படவுள்ள நேர்காணல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

 தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் 

கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியைப் பிடித்தபோது சுரேஷ் சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "தாக்குதல் திட்டம் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, இது இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4