இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (05.09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும் எனவும் மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகள் மற்றும் தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்  அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4