நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருவருக்கு குருட்டுத் தன்மை: GMOA தகவல்

#SriLanka #NuwaraEliya #Eye
Prathees
2 years ago
நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருவருக்கு குருட்டுத் தன்மை:  GMOA தகவல்

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட Predisilone திரவத்தினால் ஏற்பட்ட சிக்கல்களினால் இரண்டு நோயாளர்கள் முழுநேர குருட்டுத்தன்மைக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 ஏப்ரல் மாதத்தில், 34 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அவர்களில் 17 பேர் சிக்கல்கள் காரணமாக மீண்டும் நுவரெலியா பொது வைத்தியசாலை கிளினிக்கிற்கு வந்துள்ளதாக வைத்தியர் கனிஷ்க அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 மேலும் 15 நோயாளிகள் தற்போது கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள விசேட கண் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் பார்வை மீளுமா என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் வைத்தியர் கூறுகிறார்.

 கண்புரை சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'பிரிடிசிலன்' மருந்து அரசாங்கத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வழங்கப்பட்டதால் நோயாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு சுகாதார அமைச்சும் அரசாங்கமும் முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4