சேனல் 4 ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கு தயார் - மனுஷ நாணயக்கார

#SriLanka #Investigation #government #Social Media #report
Prasu
2 years ago
சேனல் 4 ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கு தயார் - மனுஷ நாணயக்கார

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிடும் ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவைப்படும் நிலையில், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எந்தவகையிலும் தயங்காது எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சேனல் 4 வெளியிடும் ஆவணப்படம் தொடர்பில் சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல் குறித்து சிறப்பு ஆவணப்படம் பிரித்தானியாவின் சேனல் 4 நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது.

 குறித்த ஆவணப்படம் இன்றைய தினம் பிரித்தானிய நேரப்படி 11.05 இற்கு வெளியிடப்படுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “Sri Lanka’s Easter Bombings – Dispatches” என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4