அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

#SriLanka #Lanka4 #pirasanna ranathunga
Kanimoli
2 years ago
அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 18 வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

 அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு சொந்தமான காணியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்தினால் காணி உறுதிப்பத்திரங்களுக்கு அதிக பெறுமதி வழங்கப்படுவதனால் மக்கள் அதனை பெற்றுக்கொள்ள முன்வருவதில்லை என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டபிள்யூ. டி.வீரசிங்க தெரிவித்தார்.

 எனவே குறித்த காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுவீகரித்து அதற்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அந்த காணிகளின் உரிமையை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவதற்கு அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4