கும்ப ராசியினருக்கு அந்நியர்களால் குடும்பத்தில் சங்கடம் உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கும்ப ராசியினருக்கு அந்நியர்களால் குடும்பத்தில் சங்கடம் உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: குழப்பங்கள் விலகும். வழக்கத்தை விட இன்று கவனமுடன் செயல்படுவீர்கள். பரணி: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிதிநிலை உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எண்ணம்போல் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். ரோகிணி: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். குடும்பப்பிரச்னை தீரும். மிருகசீரிடம் 1,2: உங்கள் சுய ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தில் கவனம் தேவை. திருவாதிரை: திடீர் பயணம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். புனர்பூசம் 1,2,3: வேலை பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். 

கடகம்

புனர்பூசம் 4: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூசம்: நீண்ட நாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆயில்யம்: புதிய நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

சிம்மம்

மகம்: வியாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூரம்: புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும். உத்திரம் 1: தொழிலில் இருந்த தடைகள் விலகும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயலில் லாபம் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். அஸ்தம்: குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: தீராமல் இருந்த ஒரு பிரச்னை பெரியோர் உதவியுடன் இன்று முடிவிற்கு வரும். 

துலாம்

சித்திரை 3,4: ஆவலுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். அமைதி காக்க வேண்டிய நாள். சுவாதி: செயல்களில் இழுபறி உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியின் காரணமாக எதிர்பார்த்ததை அடைவீர்கள். செலவிற்கேற்ற வரவு வரும். 

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: திருமண வயதினருக்கு வரன் குறித்த செய்தி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்டை: புதிய முயற்சி லாபம் தரும். உங்கள் ஆலோசனையை நண்பர்கள் ஏற்பார்கள். நிதிநிலை உயரும். 

தனுசு

மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். பூராடம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: பகைவர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும். திருவோணம்: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் எதிர்காலம் குறித்த சிந்தனை உண்டாகும். அவிட்டம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவுகளிடம் சுமூகமான நிலை உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்கள். சதயம்: எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். கவனக்குறைவால் மேலதிகாரிக்கு பதில் சொல்ல வேண்டி வரும். பூரட்டாதி 1,2,3: அந்நியர்களால் குடும்பத்தில் சங்கடம் உண்டாகும். சிலர் வீண் பழிக்கு ஆளாவீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.