தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருப்போம்!

#SriLanka #Foriegn
Mayoorikka
2 years ago
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருப்போம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரால் 03.09.2023 என திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உண்மைக்கு புறம்பானதும் தவறான தகவல்களை தாங்கியும் அமைப்பின் பெயரினால் கடந்த காலங்களில் வெளிவந்த அறிக்கைகளை புறந்தள்ளுமாறும், உத்தியோ பூர்வ அறிக்கைகள் எதிர்காலங்களில் எவ்வாறு வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பெயரினை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடாத உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்து, மக்கள் மத்தியில் சில குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. 

 இவ்வாறு தேசவிரோதிகளினால் புலனாய்வு ரீதியாக மக்கள் மீது திணிக்கப்படும் அவநம்பிக்கையான செய்திகளின் ஊடாக, போராட்ட தளத்தில் இருந்து அவர்களை விலகிச் செல்ல வைக்கும் எண்ணத்துடன் இவ்வாறான போலி தகவல்கள் வெளிவருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4