ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையர்களுக்கு வரும் மர்ம பார்சல்கள்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையர்களுக்கு வரும் மர்ம பார்சல்கள்!

இலங்கைக்கு அனுப்பப்பட்ட தபால்களை சோதனைக்கு உற்படுத்தியபோது அதில் இருந்து 1406 கிராம் கஞ்சா ம்றறும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னிலையில் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி ஒரு கோடியே நாற்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் ரூபா (14,085,000) எனத் தெரியவந்துள்ளது.  

அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ளவர்களின் முகவரிகளுக்கு போதைப்பொருள் அடங்கிய குறித்த பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நீண்ட நாட்களாக பார்சல்கள் அகற்றப்படாததால், குறித்த பார்சல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4