ஈஸ்டர் தாக்குதல் : பிள்ளையானிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்!

#SriLanka #Easter Sunday Attack #Lanka4
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் :  பிள்ளையானிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்!

ராஜபக்ஷக்களின் உதவியுடன் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில், நீதி கிடைக்கும் என்று  ஒருபோதும் நம்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் நேற்றைய (05.09) அமர்வில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து சேனல்-04 வெளியிட்ட காணொலி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அன்ஷிப் அசாத் மௌலானாவிற்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனிற்கும் இடையில் நீண்டகாலமாக தொடர்புள்ளது. இவருடைய நிதி விவகாரங்களை மௌலானாவே முகாமைத்துவம் செய்துள்ளார். 

அத்துடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலேவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார். தற்போது சுரேஷ் சாலே தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட விடயம் உண்மையாகியுள்ளது. 

அதேபோல்ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற விடயம் உண்மையாகியுள்ளது. 

ஆகவே இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தை (பிள்ளையான்) முறையாக விசாரணை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4