கொள்ளையடிக்க வந்த திருடனுக்கு நேர்ந்த கதி

#SriLanka #Colombo #Arrest #Police #Lanka4
Kanimoli
2 years ago
கொள்ளையடிக்க வந்த திருடனுக்கு நேர்ந்த கதி

ஹோமாகம, பிடிபன குவர்தன மாவத்தை பகுதியில் கொள்ளையடிக்க வந்த திருடனை கணவன் மனைவி சேர்ந்து தாக்கி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவமானது ஹோமாகம, பிடிபன குவர்தன மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 திருடன் ஒருவன் கத்தியொன்றுடன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டு உரிமையாளரின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது.

 அப்போது, ​​தள்ளுமுள்ளு காரணமாக தவறி விழுந்த திருடன் மீண்டும் எழுந்து அவர்களின் மகளை பிடிக்க முயன்ற வேளை, குறித்த வீட்டு உரிமையாளர் திருடனின் கையில் இருந்த கத்தியை பறித்து அதே கத்தியால் திருடனை தாக்கியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான திருடன் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பாக ஹோமாகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4