ஆண்டிபயாடிக் கொடுக்கப்பட்டு இறந்த நோயாளியின் உடல் உறுப்புகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

#SriLanka #Colombo #Hospital
Prathees
2 years ago
ஆண்டிபயாடிக் கொடுக்கப்பட்டு இறந்த நோயாளியின் உடல் உறுப்புகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆண்டிபயாட்டிக் மருந்து வழங்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்த நோயாளியின் உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி. விஜேசூரிய நோயாளிக்கு வழங்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெற வரகாபொல வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐம்பது வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 அவருக்கு வழங்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4