ஜெய்லர் திரைப்படத்தை தூக்கி விழுங்கப்போகும் ரஜினி 170

#Actor #TamilCinema #rajini kanth #Lyca #Production
Prasu
2 years ago
ஜெய்லர் திரைப்படத்தை தூக்கி விழுங்கப்போகும் ரஜினி 170

ஜெய்லர் திரைப்படம் இதுவரைக்கும் 600 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி, நெல்சன், அனிருத் என படத்தில் பணியாற்றிய முக்கிய பிரபலங்களுக்கு பரிசுகளை அள்ளி வீசிக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் ரஜினி அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதற்கான படப்பிடிப்புகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்தில் மஞ்சு வாரியார், பகத் ஃபாசில் போன்ற முக்கிய பிரபலங்களும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் ஞானவேலுவுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கின்றனர். பொதுவாக ஞானவேலுவின் படம் என்றாலே சமூக கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படமாகத்தான் இருக்கும். உதாரணமாக ஜெய்பீம் படத்தை கூறலாம். 

ஆனால் ரஜினியின் மாஸ் ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு பிறகு இன்னும் உயர்ந்திருக்கிறது. அதனால் ஒரு 10 சதவீதம் ரஜினியிசத்தை படத்தில் ரசிகர்களுக்காக காட்ட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

 மேலும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெய்லரில் சம்பாதித்ததை விட இந்தப் படத்தின் மூலம் லைக்கா தான் அதிகமாக சம்பாதிக்க போகிறது என்று சொல்லப்படுகிறது என்பது மட்டும் நிச்சயம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4