பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்சனை எதிர்கொள்ளும் தனுசு ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்சனை எதிர்கொள்ளும் தனுசு ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயல் திறனால் நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். வருமானத்தில் இருந்த தடை விலகும். பரணி: வியாபாரம் விருத்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உற்சாகமான நாள். கார்த்திகை 1: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். ஆதாயம் கூடும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி ஆதாயம் தரும். மன வலிமை அதிகரிக்கும். ரோகிணி: வழிபாட்டில் மனம் செல்லும். நட்பு வட்டம் விரியும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்கள் குறையும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். நண்பர்கள் உதவுவார்கள். திருவாதிரை: திட்டமிட்ட செயலிலும் செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். சங்கடங்கள் தோன்றும். புனர்பூசம் 1,2,3: பயணத்தில் சங்கடம் தோன்றும். வாகனத்தை மாற்றும் யோசனை உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: பெரியோரின் ஆசியால் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாராத வரவு உண்டு. பூசம்: நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல்கள் லாபமாகும். ஆயில்யம்: விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சிம்மம்

மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய வாடிக்கையாளர்களால் ஆதாயம் கூடும். பூரம்: கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பழைய முயற்சி ஒன்றில் இன்று லாபம் காண்பீர்கள். உத்திரம் 1: கடந்த கால அனுபவங்களுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்ப நலனில் கவனம் செலுத்துவீர்கள். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: பண வரவில் இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோர்களின் ஆதரவால் பிரச்னை தீரும்.

துலாம்

சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நன்மை உண்டாகும். சுவாதி: வெளியூர் பயணங்களை ஒத்தி வைப்பது நன்மையாகும். செயல்களில் குழப்பம் ஏற்படும். விசாகம் 1,2,3: நிதானமாக செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம். வழக்கமான பணிகளிலும் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை தீரும். அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கேட்டை: உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும்.

தனுசு

மூலம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நண்பரின் அவசரமறிந்து உதவி செய்வீர்கள். பூராடம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றும் என்றாலும், உங்கள் செல்வாக்கால் சரிசெய்வீர்கள். உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குரு அருளால் வருவாய் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உறவினர்கள் உதவியால் தடைபட்ட செயல்களை முடிப்பீர்கள். நெருக்கடி நீங்கும். திருவோணம்: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். செல்வாக்கு கூடும். குழந்தைகளால் நன்மை அடைவீர்கள். அவிட்டம் 1,2: எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். சதயம்: தடைபட்ட ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பூரட்டாதி 1,2,3: சட்டத்திற்கு புறம்பான செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும். வருவாயில் இருந்த நெருக்கடி விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: வழிபாட்டில் மனம் செல்லும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். செலவுகள் கட்டுப்படும். உத்திரட்டாதி: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.