சனல் 4 விவகாரம் தொடர்பில் அதிகளவு பணம் இருந்தால் முறைப்பாடு செய்யுங்கள்!

#SriLanka #Colombo #Easter Sunday Attack #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
சனல் 4 விவகாரம் தொடர்பில் அதிகளவு பணம் இருந்தால் முறைப்பாடு செய்யுங்கள்!

சனல் 4 விவகாரத்துடன் தொடர்புடைய அசாட் மெளலானாவின் வங்கிக் கணக்கில் அதிகளவு பணம் இருக்கின்றதென்றால் அது தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என்றும் தம்மிடம் கூறி பயனில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

 “மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் உரையாற்றும் போது சனல் 4 சம்பவத்துடன் தொடர்புடைய அசாட் மெளலானாவின் பெருமளவிலான பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் கூறியிருந்தார். 

அசாட் மெளலானா என்பவர் முன்னாள் அமைச்சர் பிள்ளையானின் நிதி விவகாரம் தொடர்பான முன்னாள் அதிகாரியாவார். பிள்ளையானை எதிர்க்கட்சி எம்.பி போன்றே மஹிந்தானந்த எம்.பி கூறுகின்றார். அவ்வாறு அசாட் மெளலானாவின் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ய முடியும். இதனை எங்களிடம் கூறி பலனில்லை” என்றார்.

 இதன்போது எழுந்த மஹிந்தானந்த எம்.பி, “அசாட் மெளலானாவின் வங்கிக் கணக்கொன்று தொடர்பில் ஏற்கெனவே விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. அவரின் வங்கியில் பணம் 

இருப்பதால் அது சந்திரகாந்தனின் பணமாக இருக்க வேண்டுமென்றில்லை. உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் சஜித் பிரேமதாசவின் பணமாக இருக்காதுதானே. அதனால் அந்தப் பணம் அசாட் மௌலானவின் பணமே. அது தொடர்பில் விசாரணை நடக்கின்றது” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4